Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தென்கிழக்காசிய நாடுகளின் உச்சிமாநாடு இன்று ஆரம்பம்

In உலகம்
Published: 05:53 GMT, Apr 29, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Sylviya

ஆசியான் (ASEAN) என அழைக்கப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் உச்சிமாநாடு இன்று (சனிக்கிழமை) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த உச்சிமாநாட்டின் போது தென்சீனக் கடல் தொடர்பில் தொடரும் பிரச்சினை, பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்தாலோசிக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இன்று அதிகாலையில் வடகொரியாவால் ஏவுகணைச் சோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கொரிய தீபகற்பம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறித்த உச்சிமாநாட்டின் போது சமர்ப்பிக்கக் கூடிய வகையில் தென்கிழக்காசிய தலைவர்களால் திருத்தியமைக்கப்பட்ட அறிக்கை ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg