Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்கிறார் பிஞ்ச்

In கிாிக்கட்
Published: 06:22 GMT, Apr 29, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Anojkiyan
aar

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா தமைமையிலான குஜராத் லயன்ஸ் அணி, பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெறுமென அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பிஞ்ச் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நடப்பு தொடரின் ஆரம்ப போட்டிகளில் தோல்விகளை தழுவியிருந்தாலும் அதன் பின்னர் மீண்டெழுந்த குஜராத் அணி, தற்போது 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அதேவேளை பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமாயின் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டிய கட்டயாத்திலும் உள்ளது.

இந்நிலையில், இது குறித்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ”பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிக அளவில் உள்ளது. கடந்த வருடம் நாங்கள் முதல் 7 போட்டிகளில் 6இல் வெற்றி பெற்றோம். தற்போது 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அதே நிலையில் உள்ளது. இது ஒரு சிறப்பான சவால் என்று நினைக்கிறேன்’ என கூறினார்.

கடந்த பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் ஆரோன் பிஞ்ச் 34 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ஓட்டங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg