Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் : டி.ராஜா

In இந்தியா
Updated: 07:24 GMT, Apr 29, 2017 | Published: 06:33 GMT, Apr 29, 2017 |
0 Comments
1072
icon_com
This post was written by : Rajinthan
D.Raja_14496

குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து நேற்றைய தினம்  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  டி.ராஜா:

”இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் கருத்து உருவாகி வருகிறது. தற்போதைய சூழலில் அது அவசியம். இடதுசாரி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு உருவாகிறது. இடதுசாரிகள் ஒற்றுமை இந்தியாவுக்கு முக்கியம்.

இடதுசாரிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே இந்திய மக்கள் நாடாளாவிய ரீதியில் எதிா்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகவும் வலுவாக குரல் கொடுக்க முடியும் ”  எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராடினர். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விளை நிலங்களில் கெயில் குழாய்களை பதிப்பது மற்றும் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் என விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு இறங்கியுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg