Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்சில் 7.2 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம்: கடற்கரையை அண்மித்த பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

In உலகம்
Updated: 06:23 GMT, Apr 29, 2017 | Published: 06:23 GMT, Apr 29, 2017 |
0 Comments
1397
This post was written by : Sylviya

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மின்டனாவோ கடற்கரைப்பகுதியில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7.2 ரிக்டர் அளவில் பதியப்பட்ட குறித்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடற்கரையை அண்மித்த பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேறும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் சேதவிபரங்கள் தொடரபில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இதே போன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று கடந்த 1990 ஆம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் ஏற்பட்டது. அதன் போது சுமார் 2000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg