Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரி-ருவென்ரியில் தொடர்ந்து சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவது மிகக்கடினம்: வோரா

In கிாிக்கட்
Published: 07:46 GMT, Apr 29, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Anojkiyan
Manan-Vohra

ரி-ருவென்ரி கிரிக்கெட்டை பொறுத்தவரை தொடர்ந்து சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவது மிகக்கடினம் என ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மனன் வோரா கூறியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் மனன் வோரா, இத்தொடரில் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் எதிர்வரும் காலங்களில் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தனது துடுப்பாட்டம் குறித்து வோரா கூறுகையில், “ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சு மீது கவனம் செலுத்த அதிக நேரம் கிடைக்காது. நம் கண்முன் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு பந்து எப்படி வருகிறது என்பதை கணிக்க இயலாது.

ஆகவே, எப்படியான சூழ்நிலையாக இருந்தாலும், அதற்கேற்ற வகையில் விளையாடுவதற்கு தங்களை தயார் செய்து கொள்வது மிகவும் முக்கியமானது. ரி-ருவென்ரி கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்து சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவது மிகக்கடினம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg