Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் ஆரம்பம்..!

In சினிமா
Published: 08:20 GMT, Apr 29, 2017 |
0 Comments
1346
icon_com
This post was written by : Rajinthan
Srinivas-Mohan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2.0 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டகின்ற நிலையில் , உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் வேலைகள் செய்வதற்கு சற்று கால இடைவெளி தேவை என இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். எனவே 2.0 படம் அடுத்த ஆண்டு தை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பாகுபலி படத்திற்கு மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை செய்து கொடுத்த ”டா பிலிம்ஸ்” என்ற நிறுவனம்தான், தற்போது 2.0 படத்திற்கும் கிராபிக்ஸ் வேலைகளை செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் மேலும் சில உலகின் பிரபலமான கிராபிக்ஸ் ஸ்டியோக்களுடன் இணைந்து 2.0 படத்திற்காக கிராபிக்ஸ் வேலைகள்  இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கிராபிக்ஸ் வேலைகள் முடிவடைவதற்க்கு ஆறுமாத கால இடைவெளிகள் தேவை இவ் வேலைகள் முடிந்ததும், அடுத்தாண்டு ஜனவரி 25-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் 2.0 வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg