Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய – தென்கொரிய வெளியுறவுச் செயலாளர்களை சந்தித்தார் ஐ.நா செயலாளர் நாயகம்

In
Updated: 07:51 GMT, Apr 29, 2017 | Published: 07:51 GMT, Apr 29, 2017 |
0 Comments
1285
This post was written by : Sylviya

பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் தென்கொரிய வெளியுறவுச் செயலாளர் யுன் பியுங் சி (Yun Byung-se) ஆகியோரை ஐ.நா செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் நேரில் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஐ.நா பாதுகாப்புச் சபையில் நடைபெற்றுள்ளது. வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணைச் சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்புச் சபையால் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதன் பின்னரே குறித்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புச் சபையால் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தலைமை தாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த கூட்டத்தில் உரையாற்றிய ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியாவால் மேற்கொள்ளப்படும் அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தாத பட்சத்தில் அது பேரழிவை கொண்டுவரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg