Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈழத் தமிழர் தொடர்பில் தார்மீக கடமையை செய்ய தவறுகிறது இந்தியா: டி.ராஜா குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 07:47 GMT, Apr 29, 2017 | Published: 07:39 GMT, Apr 29, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : srikkanth
D.Raja_14496

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்திய அரசிற்கு இருக்;கின்ற போதிலும், அதனை செய்யாமல் இந்திய அரசு மௌனமாக இருப்பதாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று(வெள்ளிக் கிழமை) இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த டி.ராஜா மேலும் தெரிவிக்கையில்,

”2009-ம் ஆண்டு நடந்த போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசு செய்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து சர்வதேச விசாரணை நடத்த அண்மையில் ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் தீர்மான மேற்கொள்ளவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது

விசாரணை நடத்த 2 ஆண்டுகள் அவகாசமும், வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்தக் கூடாது என்றும் இலங்கை கேட்டுக் கொண்ட நிலையில் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பதை விளக்கவில்லை. இந்திய அரசு தார்மீக முறையில் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் தமது கடமையை செய்யாமல் இந்திய அரசு தட்டிக்கழித்து வருகின்றது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, இலங்கை இராணுவத்தினால் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டும் வருவதால், கச்சத்தீவு உடன்படிக்கையை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் டி.ராஜா கோரிக்கை முன்வைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg