Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரியாவிடை போட்டியை மீண்டும் புறக்கணித்தார் அப்ரிடி

In கிாிக்கட்
Published: 08:17 GMT, Apr 29, 2017 |
0 Comments
1459
icon_com
This post was written by : Anojkiyan
ad

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கண்ட அதி சிறந்த வீரரான முன்னாள் தலைவர் சயிட் அப்ரிடி, தனக்கு ஏற்பாடு செய்த பிரியாவிடை போட்டியை மீண்டும் புறக்கணித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழு தலைவர் நஜம் சேதி, ஏற்பாடு செய்வதாக கூறிய பிரியாவிடை போட்டியை அப்ரிடி ஏற்க மறுத்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதற்கு விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ”எனக்காக பிரியாவிடை போட்டிக்கு ஏற்பாடு செய்வதாக கூறிய நஜம் சேதிக்கு என்னுடைய நன்றி. துரதிருஷ்டவசமாக எனக்கு ஒப்புக்கொண்ட சில வேலைகள் இருப்பதால், இதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

வீரர்கள் பிரியாவிடை போட்டியுடன் செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனிஸ்கான் ஆகியோர் முறையான பிரியாவிடை போட்டியுடன் செல்ல இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வருங்காலத்திலும் இந்த முறைமை தொடரும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற அப்ரிடி, கடந்த பிப்ரவரி மாதம் ரி-ருவென்ரி போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரின்போது பிரியாவிடை கொடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்த நிலையில், ‘பிரியாவிடை போட்டி என்பது என்னுடைய உரிமை’ என்று அப் போட்டியினை அப்ரிடி மறுத்துவிட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழு தலைவர் நஜம் சேதி, கேட்டுக்கொண்டதையும் அப்ரிடி மறுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg