Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரஷ்யாவில் பரவி வரும் காட்டுத் தீ: இதுவரை 30 வீடுகள் சேதம்

In ஐரோப்பா
Published: 08:30 GMT, Apr 29, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Sylviya

ரஷ்யாவின் இர்கஸ்க் (Irkutsk) பிராந்தியத்தில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக இதுவரை சுமார் 30 வீடுகள் முற்றாக கருகி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தகவலை ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்திருந்தது. இந்த காட்டுத் தீயிற்கு அதிகூடிய வெப்பநிலை மற்றும் வேகமான காற்று என்பனவே காரணம் என குறித்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தீயினால், குறித்த பகுதியில் உள்ள இரண்டு பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் வளி மாசு காரணமாக அங்குள்ள பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீயை கட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு சுமார் 600 தீயணைப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg