Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமண மண்டப அலங்காரக் கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்

In இந்தியா
Updated: 08:48 GMT, Apr 29, 2017 | Published: 08:48 GMT, Apr 29, 2017 |
0 Comments
1237
This post was written by : Rajinthan
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பிதி கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றிருந்தனர். திருமணவிழாவுக்கு முன்னதாக சில சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது விழா பந்தலில் அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த  கூரை திடீரென்று இடிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் வைத்தியசாலைக்கு  கொண்டு செரல்லப்பட்டனர் . அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில்  சிலர் போகும் வழியிலும், சிலர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் அபாயகட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குமேர் பகுதி போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg