Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஐக்கியத்துடன் இருக்க வேண்டும்: டொனால்ட் ட்ஸ்க்

In
Published: 09:28 GMT, Apr 29, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Sylviya

பிரித்தானியாவின் பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஐக்கியத்துடன் இருக்க வேண்டும் என, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ட்ஸ்க் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக அங்கிருந்த ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஏனைய 27 நாடுகளும் பிரித்தானியாவுடன் சிறந்த உறவை பேணவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் நடவடிக்கையால் பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் ஆகியோர் பாதிப்படையக்கூடிய நிலைமை உள்ளமையால், அவர்களின் வதிவிடம்; தொடர்பில் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் எனவும் ட்ஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg