Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அன்றாட பணிகளில் கவனம் செலுத்தாமல் தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது : திருநாவுக்கரசர்

In இந்தியா
Updated: 09:30 GMT, Apr 29, 2017 | Published: 09:30 GMT, Apr 29, 2017 |
0 Comments
1178
This post was written by : Rajinthan

அன்றாட பணிகளில் கவனம் செலுத்தாமல் தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது. தமிழக மக்கள் நலம் பெற, அதிமுக அணிகளில் பாஜக நடத்திவரும் திருவிளையாடல் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மழை இல்லை, நீர் இல்லை. காவிரி டெல்டா பாலைவனமாகி விட்டது. தமிழக அரசு இதற்கு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசிடம் நிவாரணம் பெற்று செயலாற்ற வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு வழங்கப்படவில்லை. அது விரைந்து வழங்கப்பட வேண்டும்.

அன்றாட பணிகளில் கவனம் செலுத்தாமல் தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது. கட்சி இரண்டு, மூன்றாகப் பிரிந்துகிடக்கிறது. அமைச்சர்கள் கருத்து வேறுபாடுகளுடன் இருக்கிறார்கள். எம்எல்ஏக்கள் பிரிந்து கிடக்கின்றனர். இது ஆட்சியைப் பாதிக்கிறது.

இது பாஜகவின் திருவிளையாடல் என்பது சாமானியருக்கும் தெரியும். அணிகள் உடைந்ததற்கும், இணைவதில் உள்ள சிக்கலுக்கும் பாஜகவே காரணம். அது நடத்திவரும் திருவிளையாடல் விரைந்து முடித்து வைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்பதாலும், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராது என்பதாலும் பாஜக கொல்லைப்புறம் வழியாகக் காலூன்ற முயற்சித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg