Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஒன்றிய நாடுகள் பேச்சுவார்த்தை

In
Updated: 10:40 GMT, Apr 29, 2017 | Published: 09:53 GMT, Apr 29, 2017 |
0 Comments
1228
icon_com
This post was written by : Sylviya
13

பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்று (சனிக்கிழமை) பிரெக்சிற் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரஸ்சல்ஸில் ஒன்றுகூடவுள்ளனர்.

பிரித்தானியாவுடனான எதிர்கால வர்த்தக உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முழுமை பெற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் வரை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு மக்கள், பணம் மற்றும் அயர்லாந்து தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க்கினால் ஒன்றியத்தில் உள்ள ஏனைய 27 நாடுகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg