Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம் என மோடி வேண்டுகோள்

In இந்தியா
Updated: 10:25 GMT, Apr 29, 2017 | Published: 10:25 GMT, Apr 29, 2017 |
0 Comments
1220
This post was written by : Rajinthan

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிவரும் முத்தலாக் விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம் எனவும் மாறாக அந்த நடைமுறையை எதிர்த்து உங்கள் பெண் பிள்ளைகள் போராடினால் ஆதரியுங்கள் என முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னட அறிஞர் பசவேஸ்வராவின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இஸ்லாமியா்கள் மத்தியில் காணப்படுகின்ற முத்தாலாக் எனப்டும் சட்டத்தை பயன்படுத்தி முஸ்லீம் ஆண்கள் விவகாரத்தை இலகுவாக பெற்றுவிட்டு மறுமணம் செய்கின்றமையால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்டுவதாக குற்றச்சாட்டுகள் அதிகரிகத்துள்ள நிலையில் முத்தலாக் சட்டத்திற்கு எதிராக சமூக ஆா்வலா்கள் அண்மைக் காலமாக போா்க் கொடி துாக்கி வருகின்றனா்.

குறித்த விடயம்  தொடா்பில் அரசியல் தலைவா்கள் சிலா் தங்களுடைய அரசியல் நலன் சாந்து கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனா்.

இந்நிலையிலேயே, முத்தலாக்  விவகாரத்து சம்பிரதாயம் தொடா்பில் பிரதமா் மோடி அண்மைக் காலமாக அக்கறை செலுத்தி வருகின்ற நிலையில் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளாா்.

பிரதமா் மோடியின் இவ்வாறான கருத்துக்கள் இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg