Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிக்கோலாவின் திட்டங்களை நிராகரித்தார் டேவிட் டேவிஸ்

In
Updated: 10:42 GMT, Apr 29, 2017 | Published: 10:42 GMT, Apr 29, 2017 |
0 Comments
1327
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் நிலைத்திருக்கும் வகையில் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜனால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களை, பிரெக்சிற் விடயங்களை கையாளும் பிரித்தானியாவின் செயலாளர் டேவிட் டேவிஸ் நிராகரித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் குறித்த திட்டங்கள் பிரித்தானியாவின் எதிர்கால வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே குறித்த திட்டங்களை நிராகரித்ததாகவும் டேவிட் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்கொட்லாந்தின் பிரெக்சிற் அமைச்சர் மைக் ரஸ்செல் (Mike Russell), ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் நிலைத்திருப்பதன் அவதியத்தை வலியுறுத்தி டேவிட் டேவிசுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அத்துடன், அரசியல் ரீதியான விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு என்பன காணப்படின் நிக்கோலாவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் எதுவித பாதகமும் ஏற்படாது எனவும் அவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg