Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் எதிர்காலம் மக்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது: ஜனாதிபதி

In இலங்கை
Published: 10:29 GMT, Apr 29, 2017 |
0 Comments
1245
This post was written by : Risha

சிறுபான்மையினரும், பெரும்பான்மையினரும் ஒற்றுமையாக வாழாவிட்டால் நாடு சின்னாபின்னமாகிவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கல்வியியல் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, “யுத்த அழிவுகளுக்குள்ளாகியிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வடக்கு மாகாணம் கல்வியில் தனித்துவமான முன்னேற்றத்தை நோக்கி நகர்கின்ற அதேவேளை கிழக்கு மாகாணம் கல்வியில் பின்னடைவைக் கண்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த பின்னடைவிற்கான காரணத்தை கண்டறிந்து கிழக்கு மாகாணத்தின் கல்வி மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை நாம் வகுக்கவுள்ளோம். சிறந்த நாட்டை உருவாக்க சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். சமூகம் சிறக்க வேண்டுமானால் கல்வி சிறந்தோங்க வேண்டும்.

நாட்டை அபிவிருத்தி செய்வதாயின் நாட்டில் இனங்களுக்கிடையில் சமாதானம் நிலவ வேண்டும். சிலர் வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்குகின்றனர். எந்தவொரு மதமும் பிரச்சினைகளை உருவாக்கி சீரழிந்து போக மக்களுக்குப் போதனை செய்யவில்லை. இதனை மனிதர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

நாட்டின் உரிமையாளர்களான தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழாவிட்டால் நாடு சின்னாபின்னமாகி விடும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg