Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாலிங்க-ஜயவர்தன குறித்து இந்திய வீரர் பார்தீவ் பட்டேல் கூறியது இதுதான்!

In கிாிக்கட்
Updated: 12:37 GMT, Apr 29, 2017 | Published: 10:32 GMT, Apr 29, 2017 |
0 Comments
4693
icon_com
This post was written by : Anojkiyan
PAL8185

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியின் புயல் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, அணியின் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன ஆகியோர் குறித்து அணியின் விக்கெட் காப்பளர் பார்தீவ் பட்டேல் மனம் திறந்துள்ளார்.

இருமுறை ஐ.பி.எல் தொடரில் மகுடம் சூடிய மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் லசித் மாலிங்க இடம்பெற்றிருந்தாலும் அவரது பந்து வீச்சு தாக்கும் செலுத்தும் வகையில் அமைய வில்லை.

இது குறித்து பலரும் விமர்சித்து வருகின்ற நிலையில் அவருக்கு ஆதரவாக அணியின் விக்கெட் காப்பளர் பார்தீவ் பட்டேல் குரல் கொடுத்துள்ளார்.

மாலிங்க குறித்து பட்டேல் கூறியதாவது, “மாலிங்க காயங்களிலிருந்து விடுபட்டு வருகிறார். அவர் தற்போது சிறந்த நிலையில் இல்லாதது குறித்து நாங்கள் கவலைபடவில்லை. அவர் விரைவில் முழு பலத்துடன் பார்முக்கு திரும்புவார், எங்கள் அணி தனிப்பட்ட வீரரை மட்டும் சார்ந்து இருக்கவில்லை” என கூறினார்.

பயிற்சியாளர் ஜயவர்தன குறித்து கூறுகையில், “ஜயவர்தன பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர். ரி-ருவென்ரி போட்டிகளில் அவருக்கு அதிக அனுபவம் உள்ளதால், அது எந்தளவுக்கு கடினமானது என அவர் புரிந்து வைத்துள்ளார்” என குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg