Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தவான் தனது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் துடுப்பெடுத்தாடினார்: வோர்னர்

In கிாிக்கட்
Updated: 10:42 GMT, Apr 29, 2017 | Published: 10:40 GMT, Apr 29, 2017 |
0 Comments
1511
This post was written by : Anojkiyan

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், ஷிகார் தவான் தனது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் இயல்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இப்போட்டியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே வோர்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. தவான், வில்லியம்சன் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள். தவான் தனது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் இயல்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

பஞ்சாப் வீரர் மார்ஷ் அதிரடியாக விளையாடினார். ஆனால் அவரை எங்கள் பந்துவீச்சாளர்கள் இறுதியாக கட்டுப்படுத்தி விட்டனர்” என கூறினார்.

இப்போட்டியில், தவான் 48 பந்துகளில் 9 பவுண்ரிகள் ஒரு சிக்ஸர் அடங்களாக 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg