Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடைகளுக்கு ஜேர்மனியில் தடை

In ஐரோப்பா
Published: 11:27 GMT, Apr 29, 2017 |
0 Comments
1343
icon_com
This post was written by : Sylviya
16

பாதுகாப்பின் பொருட்டு முழுமையாக முகத்தை மூடக்கூடிய வகையிலான ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட வேண்டும் எனும் சட்டவரைவிற்கு, ஜேர்மனிய கீழ்ச்சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அதனடிப்படையில் சிவில் ஊழியர்கள், நீதிபதிகள் மற்றும் படைவீரர்கள் ஆகியோர் பணியில் ஈடுபடும் போது தங்களது முகங்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியக் கூடாது என நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தெரிவித்திருந்ததை தொடர்ந்தே குறித்த சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இருப்பினும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம் குடியேற்றவாசிகள் மத்திய கிழக்கில் இருந்து ஜேர்மனியில் தஞ்சம் பெற்றுள்ள நிலையில், குறித்த சட்டத்தை அமுல்படுத்துவது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg