Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு: கனடியருக்கு இரு தசாப்தங்களின் பின்னர் தண்டனை

In கனடா
Updated: 11:58 GMT, Apr 29, 2017 | Published: 11:58 GMT, Apr 29, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Risha
court

ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கனடிய பிரஜையொருவருக்கு அமெரிக்காவில் 15 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு டெட்ரோயிட் ஆற்றினூடாக படகு மூலம் குடியேற்றவாசிகளை கடத்திச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) அவரது தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் இடம்பெற்றுவந்த நிலையில், அவர் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காது கனடாவிற்கு தப்பி வந்த நிலையிலேயே இவரது தண்டனை தாமதிக்கப்பட்டதாக நீதித்துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அவர் மீண்டும் கனடாவின் வின்சர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg