Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழீழ விடுதலைப்புலிகளின் கனவுகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன: ஐங்கரநேசன்

In இலங்கை
Published: 12:10 GMT, Apr 29, 2017 |
0 Comments
1532
This post was written by : Ravivarman

தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டிருந்த பல அபிவிருத்திச் செயற்பாடுகள் இன்று எமது அமைச்சினால் நிறைவேற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வடமாகாண விவசாய அமைச்சரால் கால்நடை பயிற்சி நிலையம் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த இடத்திற்கு அறிவியல் நகர் எனப் பெயரிட்டு பல்கலைக்கழகம் போன்ற பல கட்டடங்களை அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். அந்தவகையில் நாங்கள் இன்று இந்த கால்நடைத்திணைக்களத்தின் பயிற்சி நிலையம் அமைத்துள்ள பகுதியானது அவர்களால் திட்டமிடப்பட்டிருந்த பல் வைத்தியசாலைக்கான பகுதியாகும்.

எனவே நாம் இந்தப் பகுதிக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளை மேலும் வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லவேண்டும். மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி மாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகளுக்குப் போதாமலிருக்கின்றது. எம்மிடம் இருக்கின்ற வளங்களைக் கொண்டு மேலும் எமது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக்கொள்ளவேண்டும்” என அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

12520163 12520165 12520170

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg