Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஊடகவியலாளனைக் கொல்வதால் விடுதலைப் போராட்டத்தினை தடுக்கமுடியாது: வடக்கு முதலமைச்சர்

In இலங்கை
Published: 14:32 GMT, Apr 29, 2017 |
0 Comments
1352
icon_com
This post was written by : Ravivarman

“தராகி போன்ற ஊடகவியலாளர்களைக் கொல்வதன் மூலம் தமிழரது போராட்டத்தினைத் தடுக்க நினைப்பது மிலேச்சத்தனமானது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“படுகொலை செய்யப்பட்ட தராகி என்ற டி.சிவராம் உயிருக்கு அஞ்சாத ஓரு ஊடகவியலாளன். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தும் தனது எழுத்தில் இருந்து சற்றும் பின்வாங்காத போராளி. தனி ஒரு தராகியை கொல்வதன் மூலம் அவரின் கொள்கைகளை அழித்துவிடலாம் அல்லது அவ் வழியில் ஈடுபடுகின்ற ஏனைய அங்கத்தவர்களை பீதியடையச் செய்து அடக்கிவிடலாம் என்று எண்ணுவது மிலேச்சத்தனமானது.

அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் காலம் சென்றாவது தமது கோரிக்கைகளில், கொள்கைகளில் வெற்றி பெற்றிருப்பதை சரித்திரவாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம். அடக்குமுறைகள் அதிகரிக்க அதிகரிக்க வீறுகொண்டெழுகின்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

IMG_5609 IMG_5610 IMG_5611

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg