Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி தொலைபேசி அழைப்பால் அதிர்ந்தார் எடப்பாடி!

In இந்தியா
Updated: 07:03 GMT, Apr 30, 2017 | Published: 03:52 GMT, Apr 30, 2017 |
0 Comments
1533
This post was written by : Rajinthan

“நீங்கள் 24 மணிநேரமும் எங்களால் கவனிக்கப்படுகிறீர்கள். இரு மாதங்களில் ரூ.380 கோடி பணக் கொடுக்கல் வாங்கல்கள் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன” என டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணக்கொடுக்கல் வாங்கல் குற்றச்சாட்டில் தினகரன் கைதாவதற்கு முன்னர், டெல்லியில் தங்கியிருந்த அவரை   பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னரே குறித்த தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதன் பின்னர் இன்றுவரை  ரூ.380 கோடி பணக் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும்   குறித்த தொலைபேசி அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாவை லஞ்சமாக கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் தினகரன் கைதாகி சில தினங்களுக்குள் இத் தகவல் வெளியாகியுள்ளமை, தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg