Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிர்கிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு!

In
Updated: 03:48 GMT, Apr 30, 2017 | Published: 03:48 GMT, Apr 30, 2017 |
0 Comments
1240
This post was written by : Anojkiyan

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 9 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியிலேயே நேற்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் குறித்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இதில் 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணியை மீட்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கடந்த மாதமே எச்சரிக்கை விடுத்திருந்ததாக கிர்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg