Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மின் துண்டிப்பினை எதிர்கொள்ள சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவ நடவடிக்கை

In இந்தியா
Updated: 05:41 GMT, Apr 30, 2017 | Published: 04:46 GMT, Apr 30, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Rajinthan
solar-panels-india

மின்துண்டிப்பு பிரச்சினையினை எதிர்கொள்ள மின்சார சபை அலுவலகங்களில் சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோடை வெயில் தீவிரம் அடைந்துள்ளதனால் மின்சார பாவனைகள் அதிகரித்துள்ளது. இதை எதிர்கொள்வதற்க்கு மின்சார சபை பல்வேறு தரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக சூரியமின் சக்தியை அதிகளவில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சூரிய சக்தி மின்கலங்களை வீடுகளில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் நிறுவுதற்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தனியார் சூரியசக்தி மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார சபை தலைமை பொறியியலாளர் அலுவலகங்களில் சூரியசக்தி நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 9 மண்டல தலைமை பொறியியலாளர் அலுவலகங்கள், 21 மின்பகிர்மான  அலுவலகங்களில் சூரியசக்தி மின்கலங்கள் பொருத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு அலுவலகத்திலும் 10 முதல் 20 கிலோவாட்  உற்பத்தி திறனில் சூரியசக்தி மின் கலங்கள் பொருத்தப்படவுள்ளன. ஒரு கிலோவாட் திறனில் 5 அலகுகள் மின் விநியோகம் கிடைக்கும் என மின்சார சபை அதிகாரியொருவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg