Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் காப்புறுதி: அகிலவிராஜ்

In இலங்கை
Updated: 06:49 GMT, Apr 30, 2017 | Published: 04:37 GMT, Apr 30, 2017 |
0 Comments
1425
icon_com
This post was written by : Anojkiyan
akil

இந்த வருடத்துக்குள் 45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் காப்புறுதி செயற்திட்டத்தை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இதற்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வியியல் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நிகழ்வுகளில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“எல்லா சமூகத்தாரும் தமக்கே உரித்தான பாரம்பரிய கலாசார விழுமிய பண்பாட்டு சிறப்பம்சங்களை பேணிப் பாதுகாத்து அதன்படி இந்த நாட்டில் வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் உள்ளன. கடந்த கால அரசாங்கத்தில் இருந்ததைப் போல வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்று பிரித்துப் பார்க்காது பொதுவான கல்விக் கொள்கையை வகுத்து நாம் இன ஐக்கியத்தின்பால் செயற்பட்டு வருகின்றோம்.

இலங்கையின் கல்வியமைச்சிலே முதற் தடவையாக இன நல்லிணக்கப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்விக்கு பெருந்தொகை செலவு செய்து கிழக்கு மாகாண கல்வித் தரத்தை உயர்த்தவுள்ளோம்.

அந்த வகையில் 3901 அதிபர்களையும், கல்வி நிர்வாக சேவையில் 852 அதிகாரிகளை நியமிக்க முடிந்தது. மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் வளவாளர்காள 1190 பேர் உள்வாங்கப்படவுள்ளார்கள்.

எதிர்வரும் காலத்திற்குள் மாகாணப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கணக்கிட்டு 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்வாங்கப்படவுள்ளார்கள். 5 ஆயிரம் பாடசாலைகளுக்கு கணனிகளை வழங்கவிருக்கின்றோம். பிரதான பாடசாலைகளுக்கு 50 கணனிகளை வழங்கும் உத்தேசம் உள்ளது. அருகிலுள்ள சிறந்த பாடசாலை திட்டத்திலே 78 பாடசாலைகளுக்கு போதுமான சிறந்த பௌதீக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg