Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற் விதிமுறைகளுக்கு 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இணக்கம்

In
Published: 04:40 GMT, Apr 30, 2017 |
0 Comments
1457
icon_com
This post was written by : Sylviya

பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது, பிரெக்சிற் தொடர்பான விதிமுறைகளை அந்நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பிரஸ்சல்ஸில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற குறித்த கூட்டத்தின் முடிவில் அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), பிரித்தானியாவின் பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஐக்கியத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த டஸ்க், “பிரெக்சிற் விடயத்தில் 27 உறுப்பு நாடுகளின் ஐக்கியம் மிக முக்கியம். பிரித்தானியாவுடன் பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 27 நாடுகளும் மக்களின் உரிமைகள், நிதி, மற்றும் அயர்லாந்தின் எல்லைப் பிரச்சினை ஆகியன தொடர்பில் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பிரெக்சிற் நடவடிக்கையால் பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் ஆகியோர் பாதிப்படையக்கூடிய நிலைமை உள்ளமையால், அவர்களின் வதிவிடம் தொடர்பில் உத்தரவாதம் வேண்டும். பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் வதிவிடத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்தில் பிரெக்சிற் குறித்த விடயத்தில் நாம் விரைந்து தீர்வு காண்போம்” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg