Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போன 12 வயது சிறுமி முதலையின் வயிற்றுக்குள் இருந்து மீட்பு!

In
Updated: 05:44 GMT, Apr 30, 2017 | Published: 05:04 GMT, Apr 30, 2017 |
0 Comments
2919
This post was written by : Anojkiyan
Bulannatuwa-Lake-in-Galnewa

அநுராதபுரம் கல்நேவ – முலன்னடுவ கங்கையில் கடந்த 27ஆம் திகதி நீராடச்சென்ற 12 வயது சிறுமியொருவர், முதலையின் வயிற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தனது பெற்றோர் மற்றும் அண்டை வீட்டு சிறுவர்களுடன் கங்கையில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடிவந்த நிலையில், சிறுமியின் உடற்பாகங்கள் நேற்று (சனிக்கிழமை) முதலையொன்றின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கல்நேவ-மத்திய கல்லூரியில் 7ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த மாணவியே இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி தனது 13வது பிறந்த நாளை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி கொண்டாட இருந்த நிலையிலே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg