Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்ல குப்பைமேடு பகுதியிலிருந்து வெளியேறும் தீப்பற்றக்கூடிய வாயு

In இலங்கை
Updated: 06:01 GMT, Apr 30, 2017 | Published: 05:32 GMT, Apr 30, 2017 |
0 Comments
1278
icon_com
This post was written by : Anojkiyan
mit

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதியிலிருந்து உடன் தீப்பற்றக் கூடிய ஒருவகையான வாயு, சிறிய அளவில் வெளியேறுவதாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹேஸ் ஜயவிரு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (சனிக்கிழமை) மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, தேசிய கட்ட ஆராய்வக நிறுவனம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பின்னரே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது குறித்த அறிவிப்பு அப்பகுதி மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் 32 பேர் உயிரிழந்ததோடு, நூற்றிற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி சந்திரதாச தலைமையில் தனிநபர் விசாரணைக்கு குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg