Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொடநாடு பங்களாவில் இருந்த ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் திருட்டு

In இந்தியா
Updated: 07:42 GMT, Apr 30, 2017 | Published: 05:44 GMT, Apr 30, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Rajinthan
201704300846023857_four-arrested-Jayalalithaa-5-watches-robbery-in-Kodanad-_SECVPF

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் திருடப்பட்டுள்ளன. இத்திருட்டுடன் தொடர்புடைய 4 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு, 5 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து நீலகிரி மாவட்ட பொலிஸ் ஆணையாளர் முரளி ரம்பா ஊடகவியாளர்களிடம் கூறியதாவது:-

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 கார்களில் கொடநாடு எஸ்டேட் பகுதிக்கு வந்துள்ளார்கள். பொலிஸார் கண்டுபிடிக்காமல் இருக்க கார்களில் போலி இலக்கத்தகடுகளை பொருத்தி உள்ளனர்.

காவலாளி ஓம் பகதூரை கொலை செய்த அந்த கும்பல், மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை கத்தியால் குத்தியதுடன், அவர் மீது மயக்க மருந்தினை வீசியுள்ளனர். இதையடுத்து குறித்த கும்பல் பங்களாவின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து,  அலுமாரிகளில் இருந்த 5 கைக்கடிகாரங்கள் மற்றும் விலை உயர்ந்த பளிங்கு கற்களால் ஆன பழமை வாய்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கூடலூரில் சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்ருந்த 2 கார்களை பறிமுதல் செய்து நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவை சேர்ந்த கும்பலுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயற்பட்ட கனகராஜ் என்பவர் விபத்தில் இறந்துவிட்டார். ஏனையோரை கைதுசெய்து நடத்திய விசாரணையில், 5 கைக்கடிகாரங்களையும் கேரளாவில் உள்ள ஒரு ஆற்றில் எறிந்துள்ளமை தெரியவந்துள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை தனிப்படை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg