Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபகற்பம் தொடர்பில் கட்டுப்பாடு வேண்டும்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

In உலகம்
Updated: 05:36 GMT, Apr 30, 2017 | Published: 05:36 GMT, Apr 30, 2017 |
0 Comments
1427
This post was written by : Sylviya

கொரிய தீபகற்பம் தொடர்பில் கட்டுப்பாடு வேண்டும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ (Rodrigo Duterte) தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் உச்சிமாநாட்டின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன் போது கருத்து தெரிவித்த ரொட்ரிகோ, “நான் அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து இன்று இரவு தொலைபேசி அழைப்பு ஒன்றினை எதிர்பார்த்திருக்கின்றேன். கொரிய தீபகற்ப விடயத்தில் வன்முறை வேண்டாம் என தெரிவிக்க நான் யார்? அதனால் குறித்த விடயத்தில் வன்முறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கவுள்ளேன். ஏனெனில் இந்த பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்தால் அதில் சிக்கி சீரழிவது தென்கிழக்காசிய நாடுகளே. அது மிகவும் மோசமானது. எல்லோரும் இதை நினைத்து வருந்துகின்றார்கள்” என தெரிவித்தார்.

அத்துடன், வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் உள்ள பிரச்சினை தொடர்பில் தென்கிழக்காசிய நாடுகள் அதிருப்தியடைந்துள்ளன எனவும் குறித்த பிரச்சினைக்கு தீர்வாக அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுமேயானால் அது பேரழிவினை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg