Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுப்பர் ஓவர் முறையில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை அணி

In கிாிக்கட்
Updated: 07:18 GMT, Apr 30, 2017 | Published: 06:53 GMT, Apr 30, 2017 |
0 Comments
1356
icon_com
This post was written by : Shailu
bumrah

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் சுப்பர் ஓவர் முறையில் மும்பை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய (சனிக்கிழமை) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்த குஜராத் அணி,  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

154 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 153 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், போட்டியின் வெற்றியை தீர்மானிக்க சுப்பர் ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.  இம்முறையில் மும்பை அணியில் பொல்லார்டு மற்றும் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இதில் மும்பை அணி 11 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் 4வது மற்றும் 5வது பந்தில் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தனர்.

12 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர்.

பும்ராவின் பந்து வீச்சில் திணறிய குஜராத் அணி வீரர்கள், இறுதிப் பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில், மெக்கல்லத்தால் ஒரு ஓட்டத்தை மட்டுமே பெற முடிந்தது. இதனால் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை தனதாக்கி கொண்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg