Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மே தின நிகழ்வினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு பாரிய இலாபம்

In இலங்கை
Updated: 07:10 GMT, Apr 30, 2017 | Published: 06:35 GMT, Apr 30, 2017 |
0 Comments
1206
icon_com
This post was written by : Anojkiyan
atv

மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்திற்கு பேரூந்துகள் வழங்கியுள்ளதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு 35 மில்லியன் தொடக்கம் 40 மில்லியன் ரூபா வரையில் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாளைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள மே தின ஊர்வலத்தின் பொருட்டு அரசியல் கட்சிகள் சுமார் 4 ஆயிரம் பேரூந்துகளை பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதான கண்காணிப்பு அதிகாரி சீ.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி ஆயிரத்து 432 பேரூந்துகளையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆயிரத்து 537 பேரூந்துகளையும், ஜே.வி.பி 209 பேருந்துகளையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி 22 பேரூந்துகளையும் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மே தின பேரணியின் பொருட்டு 7 ஆயிரம் தனியார் பேருந்துகள் வரையில் கோரப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மே தின ஊர்வலத்தின் பொருட்டு கட்சி ஆதரவாளர்கள் பங்குகொள்ளும் வகையில் மருதானையில் இருந்து கண்டி வரையிலும், திருகோணமலையில் இருந்து மருதானை மற்றும் மருதானையில் இருந்து திருகோணமலை வரையிலும் மேலதிக தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தொடரூந்து போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மே தின கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அதிவேக நெடுச்சாலைகள் ஊடாக செல்லும் பேருந்துகளுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என அதிவேக நெடுச்சாலைகளின் நிர்வாக பணிகள் மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய மே முதலாம் திகதி 24 மணிநேரங்களுக்கு கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg