Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரன் விடயத்தில் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

In இந்தியா
Published: 06:53 GMT, Apr 30, 2017 |
0 Comments
1273
This post was written by : Rajinthan

“தினகரன் உண்மையில் தேர்தல் ஆணையகத்தில் யாருக்காவது இலஞ்சம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்றால் அதனை தீவிரமாக விசாரித்து சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும். என்னுடைய பார்வையில் தேர்தல் ஆணைக்குழு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தவறான முடிவை எடுத்துள்ளது” என பா.ஜ.கவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவது-

“பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசிகலாவுடன் இருக்கும் நிலையில், ஒரேயொரு உறுப்பினரை மட்டுமே வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையை தனக்கு கொடுக்குமாறு எப்படி கேட்க முடியும் என்பது எனக்கு வியப்பாகவுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் தராமல் தேர்தல் ஆணையம் எதற்கு முடக்க வேண்டும்? சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையகம் ஒதுக்கி இருந்தால் இந்த இலஞ்ச குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளலாம்.

அப்படி என்றால் சசிகலா பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் துணைப்பொதுச் செயலாளராகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையகம் எப்படி முடிவு எடுத்தது?

ஒரு அமைப்புக்கு இலஞ்சம் கொடுப்பது மற்றும் முறையற்ற பணப் பரிவர்த்தனை ஆகிய இரண்டும் தனித்தனி வழக்குகள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரிப்பது தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg