Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீசூரி மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் அவதி

In உலகம்
Updated: 11:51 GMT, Apr 30, 2017 | Published: 06:25 GMT, Apr 30, 2017 |
0 Comments
1400
This post was written by : Sylviya

அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் தொடர்ந்து பெய்த அடை மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புற்றுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) பெய்த அடை மழையால் பல பெருந்தெருக்கள் மழை நீரால் மூழ்கியுள்ள நிலையில், தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலைமை இன்றும் தொடரக்கூடும் என மிசூரி ஆளுநர் எரிக் கிரெய்டன்ஸ் (Eric Greitens) எச்சரிக்கை விடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், இன்றும் மணித்தியாலத்திற்கு 95 கி.மீ தூரம் பயணிக்கக் கூடிய அதிவேகக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg