Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துருக்கியில் விக்கிபீடியா இணையத்தளத்திற்கு தடை

In ஐரோப்பா
Updated: 07:08 GMT, Apr 30, 2017 | Published: 06:31 GMT, Apr 30, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Sylviya
17

உலகிலேயே மிகப் பிரசித்தி பெற்ற இணையத்தளமான விக்கிபீடியா துருக்கி நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளத்தை துருக்கியில் தடை செய்தமைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள துருக்கி ப்லொக்ஸ் குழு (The Turkey Blocks group), நேற்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 8.00 மணி முதல் பொதுமக்கள் குறித்த இணைத்தளத்தை பார்வையிட முடியாது என அறிவித்திருந்தது.

தொழிநுட்ப பகுப்பாய்வு மற்றும் சட்ட இலக்கம் 5651 இற்கு அமைவான சட்டரீதியான கருத்தாய்வின் படி குறித்த இணையத்தளம் துருக்கியில் தடை செய்யப்பட்டுள்ளது என தொடர்பாடல் தொழிநுட்ப ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், குறித்த நடவடிக்கைக்கான உண்மையான காரணம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg