Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோபையிழந்து காணப்படும் நெசவுத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை: கிழக்கு முதலமைச்சர்

In இலங்கை
Updated: 07:20 GMT, Apr 30, 2017 | Published: 07:05 GMT, Apr 30, 2017 |
0 Comments
1218
This post was written by : Anojkiyan
nas

காத்தான்குடி – பாலமுனையில் மிகவும் பாரம்பரியம் மிக்க தொழிலான நெசவுத்தொழிலில் ஈடுபடுவோர் தற்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தொழிற்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இத்தொழிலை மேம்படுத்த ஆராயும் கூட்டமொன்று நேற்று (சனிக்கிழமை) கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் காத்தான்குடி பாலமுனை அலிகார் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது, தமது பாரம்பரியத் தொழிலான நெசவுத் தொழிலில் தற்போது எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் நெசவுக் கைத்தறி உற்பத்தியாளர்கள் எடுத்துரைத்தனர்.

நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த கிழக்கு முதலமைச்சர் இந்த தொழிற்துறையில் நவீன உத்திகளை புகுத்தி, நவீன நெசவு இயந்திரங்கள் மூலம் அபிவிருத்தி செய்யும் யோசனையொன்றை முன்வைத்தார்.

அத்துடன் நெசவுத் தொழிலில் ஆர்வமுடைய இளைஞர்கள் யுவதிகளுக்கு பயிற்சிகளை அளிக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைபரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg