Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகளை சந்தித்தார் சி.வி.

In இலங்கை
Published: 06:45 GMT, Apr 30, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்.கைதடியிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் வழங்காத நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஓர் அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவே இக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதி யுத்தத்தின் போதும் யுத்தம் நடைபெற்ற போதும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை குறித்து தெரிவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் முன்னெடுத்துள்ள போராட்டம், இரண்டு மாதங்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

missing persons relations n cv (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg