Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்தின் மீது லொறி மோதியதில் பயணிகள் இருவர் காயம்: பொலொன்னறுவையில் சம்பவம்

In இலங்கை
Updated: 08:45 GMT, Apr 30, 2017 | Published: 08:45 GMT, Apr 30, 2017 |
0 Comments
1402
This post was written by : Anojkiyan

பயணிகளை இறக்குவதற்காக மின்னேரி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பொலொன்னறுவை டிப்போவுக்குச் சொந்தமான பேரூந்தின் மீது, பின்னால் வந்த லொறி மோதியதில், பேரூந்து பயணிகளில் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இவ்விபத்தின் போது லொறி மோதியதில் பேரூந்து காட்டுக்குள் தள்ளிச் செல்லப்பட்டு மரங்களில் தடைப்பட்டு நின்று கொண்டதாக மின்னேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பேரூந்தும் லொறியும் பலத்த சேதத்திற்குள்ளான போதும் பயணிகள் உயிராபத்தின்றித் தப்பித்துக் கொண்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

பேரூந்தை முட்டிமோதிய லொறி சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg