Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் மரணத்திலுள்ள உண்மையை வெளிப்படுத்த வேண்டும்: சீமான்

In இந்தியா
Updated: 08:27 GMT, Apr 30, 2017 | Published: 08:22 GMT, Apr 30, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Rajinthan
சீமான்

“வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை எனத் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாணப்பத்திரத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, இறந்துபோன விவசாயிகளைப் பற்றிய உண்மை நிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

“கடன் வாங்கி செய்த விவசாயம் பொய்த்துப் போனதால் கடனைக் கட்ட வழியற்று நிற்கிற விவசாயி, தன் மானத்தை இழந்து விடக்கூடாது என்பதால் உயிரையே இழக்கத் துணிகின்றான்.

மானத்திற்காக மரணத்தையே சந்திக்கத் தயாராகும் அத்தகைய விவசாயப் பெருங்குடி மக்களின் மரணத்தை எள்ளி நகையாடுவதும், இழிவு படுத்தும் செயல்களையும் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் அரங்கேற்றி வருகிறார்கள்.

விவசாயிகள் ஏழைகள் இல்லை என்றும் அவர்கள் வட்டிக்குப் பணம்விட்டு சம்பாதிக்கிறார்கள் என்றும் விவசாயிகள் எவரும் சாகவில்லை என்றும் கூறிய அமைச்சர்கள் இன்றும் அமைச்சரவையில்தான் இருக்கிறார்கள்.

இது விவசாய பெருங்குடி மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுகளையுமே அவமதிப்பதாகவும், காயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg