Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத்தில் விறுவிறுப்படையும் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான ஏற்பாடுகள்

In இலங்கை
Published: 09:18 GMT, Apr 30, 2017 |
0 Comments
1280
This post was written by : Anojkiyan

தொழிலாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகள், மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.

இதன்படி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்திலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வுகள் கினிகத்தேனை நகரிலும் நடத்தப்படவுள்ளன.

அந்தவகையில் நாளை (திங்கட்கிழமை) தலவாக்கலையில் நடைபெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பீ.திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

அத்தோடு, தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை நகர சபை மைதானம் வரை மே தினப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மும்முரமாக முன்னெடுத்துவருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பையும் இதன்போது மக்கள் வெளிப்படுத்துவர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg