Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு விவேக் ஜெயராமன்!

In இந்தியா
Updated: 09:45 GMT, Apr 30, 2017 | Published: 09:23 GMT, Apr 30, 2017 |
0 Comments
1285
icon_com
This post was written by : Rajinthan
201704301214418321_Sasikala-sudden-decision-Deputy-General-Secretary-post-to_SECVPF

அ.தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு விவேக் ஜெயராமனை நியமிக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

விவேக் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலம் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பாக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தனது ஆதரவினை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மொத்தம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவேக் பக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவி ஏற்ற சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் கட்சியை காப்பாற்ற டி.டி.வி. தினகரனை துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்திருந்தார்.

ஆனால் இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு ரூ. 50 கோடி பேரம் பேசிய வழக்கில் தினகரனும் சிக்கினார். இதனால் அ.தி.மு.க.வை காப்பாற்ற அடுத்து தலைமை பொறுப்புக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விவேக்கினது மேற்படி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் மேலும் குழப்பநிலைகளைத் தோற்றுவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg