Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈழத் தமிழர்களுக்குச் சாதகமான எத்தனையோ விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது: சுமந்திரன்

In இலங்கை
Published: 09:58 GMT, Apr 30, 2017 |
0 Comments
1452
icon_com
This post was written by : Anojkiyan
sumanthiran-3

ஈழத் தமிழர்களுக்குச் சாதகமான எத்தனையோ விடயங்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

களுதாவளை கலாசார மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, தந்தை செவ்வாவின் 40வது நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஐ.நா சபை, சர்வதேசம், அமெரிக்கா உட்பட எவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது. எங்களுக்குச் சாதகமான எத்தனையோ விடயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. 50ஆம் 51ஆம் ஆண்டிலே ஆரம்பித்த அந்தப் பயணம் படிப்படியாக இன்றைக்கு இந்த அளவுக்கு வந்து முன்னேற்றம் கண்டிருக்கின்றது.

மிக முக்கியமாக அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும், புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும், உருவாக்கப்படும் என்ற விடயத்தை இலங்கை அரசாங்கம் 2015 ஒக்டோபர் 15ஆம் திகதி ஐநா பேரவை உரையிலே உத்தரவாதமளித்து உரையாற்றியிருக்கிறது.

இலங்கையிலே இதற்கு முன்னர் இடம்பெற்ற அத்தனை விடயங்களும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதமும் தரப்பட்டிருக்கிறது. புதிய அரசியலமைப்பிலே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது இலங்கை அரசு சர்வதேச சமூகத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளாகும். இலங்கை இவற்றை ஏற்றங்கீகரித்து கையெழுத்திட்டிருக்கின்றது. முன்னர் நடந்திருக்காத இந்த விடயங்கள் சர்வதேச மட்டத்திலே நடந்தேறியிருக்க இங்கே ஒன்றுமே நடக்கவில்லை என்று கூப்பாடு போடுவது சரியல்ல.

இத்தகைய முன்னேற்றங்களோடு ஈழத் தமிழர் அரசியல் நகர்வு திருப்பு முனையில் சென்று கொண்டிருக்கின்றது. உலகம் எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. தந்தை செல்வாவின் வழியிலே வந்த சம்பந்தன் தமிழர்களுக்குத் தலைவனாகக் கிடைத்திருப்பது ஒரு பெரும் பாக்கியம் என்றே கருத வேண்டும்” எனக் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg