Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முடியாது: திண்டுக்கல் சீனிவாசன்

In இந்தியா
Updated: 12:08 GMT, Apr 30, 2017 | Published: 10:10 GMT, Apr 30, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Rajinthan
srinivasan

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பொய் பிரசாரம் செய்து வருகிறார். எங்களிடம் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

எனவே அ.தி.மு.க வை அழித்துவிட்டு மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முடியாது. அப்படி அவர் நினைத்தால் அது பகல் கனவாகத்தான் இருக்கும். என தமிழக வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

மதுரை ரிங் வீதியில் உள்ள அம்மா மைதானத்தில் வருகின்ற 5 – ந் திகதி அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் இளைஞர் திருவிழா நடக்க இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடை பெற்றது.

இந்  நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சரார் செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

பந்தல் கால் நடும் விழா நிறைவடைந்த பின்னர் ஊடகவியாலளர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மிகவும் இணக்கமாகவும், நெருக்கமாகவும் இருக்கிறோம்.

இரட்டை இலைச் சின்னத்தினை மீட்கவே பாடுபட்டு வருகிறோம். ஆர்.கே. நகர் தேர்தலின் போதே எங்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கி இருக்க வேண்டும். ஏன் வழங்கவில்லை என்று தெரியவில்லை. என்று கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg