Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு விஷேட பாதுகாப்பு

In இலங்கை
Updated: 10:25 GMT, Apr 30, 2017 | Published: 10:25 GMT, Apr 30, 2017 |
0 Comments
1275
This post was written by : Anojkiyan

வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாதுகாப்பு வழங்க விஷேட பாதுகாப்பு படையணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஆகியன கூட்டாக இணைந்து விஷேட பிரபுக்கள் பாதுகாப்பு படையணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவின் நேரடி கண்காணிப்பில் குறித்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதுதவிர அரச உளவுப் பிரிவினர் உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg