Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற தயார்: ரஷ்யா

In ஐரோப்பா
Published: 11:15 GMT, Apr 30, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Sylviya
14

சிரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற ரஷ்யா விரும்புவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் (Sergei Lavrov) தெரிவித்துள்ளார்.

ஜோர்தானிய வெளியுறவு அமைச்சருடன் நேற்று (சனிக்கிழமை) மொஸ்கோவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே செர்கெய் மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவித்த போது, “அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து செயற்பட்டால் சிரியாவில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என ஜோர்தானிய மன்னர் பல முறை தெரிவித்திருந்தார். அவரது வார்த்தைக்கு இணங்க நாம் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். இதே விதமான ஒத்துழைப்பை நாம் அமெரிக்காவிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.

சிரிய அரசாங்கத்தால் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவினால் சிரியாவில்  நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தன.

இது போன்றதொரு நிலைமையில் செர்கெய் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளமை குறித்த இரு நாடுகளின் உறவை புதுப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg