Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வரும் பிரதமர் மோடி உத்தியோகபூர்வ நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 11:24 GMT, Apr 30, 2017 | Published: 11:24 GMT, Apr 30, 2017 |
0 Comments
1239
This post was written by : Anojkiyan

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தில் பங்குபற்ற இலங்கைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சில பகுதிகளை சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு வருகிறார் என சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இவ் அனைத்து பிரசாரங்களும் அரசாங்கத்திற்கு எதிரான சிலரினால் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களாகும்” என குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg