Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கி: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

In விளையாட்டு
Published: 11:28 GMT, Apr 30, 2017 |
0 Comments
1081
This post was written by : Shailu
Azlan Shah

நியூசிலாந்துக்கு எதிரான அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கி லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

6 அணிகள் பங்கேற்கும் 26வது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கிப் போட்டி மலேசியாவின் இபோ நகரில் இடம்பெற்று வருகின்றது. இதில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

அதன்படி இந்தியாவின் மன்தீப் சிங் முதலில் ஒரு கோலை அடித்த நிலையில், இந்திய அணிக்கு ‘பெனால்டி கோர்னர்’ வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அசத்திய ஹர்மன்பிரீத் சிங் மற்றுமொரு கோலை அடித்து இந்திய அணியை வலுப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து மீண்டும் வழங்கப்பட்ட ‘பெனால்டி கோர்னர்’ வாய்ப்பின் மூலம் ஹர்மன்பிரீத் கோல் அடிக்க, இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg