Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மோடியின் நலத்திட்டங்களால் பா.ஜ.கவினை மக்கள் விரும்புகிறார்கள்: நிர்மலா சீதாராமன்

In இந்தியா
Published: 11:51 GMT, Apr 30, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Rajinthan

தமிழகத்தில் அ.தி.மு.க இரு அணிகளையும் கட்டுப்படுத்தி பா.ஜ.கட்சியானது கால் பதிக்க நினைக்கின்றது. என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பது சரியானது அல்ல மோடியின் நலத்திட்டங்களால் பா.ஜ.கவினை மக்கள் விரும்புகிறார்கள். பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை. நிர்மலா சீதாராமன் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார்.

அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கைதுக்கு பின்னால் பா.ஜ.கட்சி இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை.

ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதில் பா.ஜ.கவின் தலையீடு எங்கு இருக்கிறது. எல்லாவற்றிலும் பா.ஜனதாவையும், மோடியையும் குறை சொல்வது வழக்கமாகவே இருக்கிறது.

கொடநாட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பு.

இந்த வழக்கில் மாநில அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg